பாடல் 726 - சிறுவை - திருப்புகழ்

ராகம் - பீம்பளாஸ்
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த தனன தான தனன தந்த ...... தனதான |
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல் சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே. |
* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை முருகன் காத்த வரலாறு.
** சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 726 - சிறுவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, காத்த, குகையில், கொண்டு, நக்கீரரை, உள்ளது, போர், குசர், வழியில், போகாமல், நம்பி, ழன்று, பெறுவேனோ, வந்து, பெருமாளே, குந்த, இந்தப்