பாடல் 711 - திருப்பேர்ருர் - திருப்புகழ்

ராகம் -
....; தாளம் -
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த தனத்தா தான தந்த ...... தனதான |
உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள் உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம் உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள் அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே. |
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 711 - திருப்பேர்ருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தா, கொண்ட, தந்த, வென்ற, காவல், கங்கை, பெருமாளே, வலைக்கே, கண்கள், தங்கள், தும்பை