பாடல் 705 - கோடைநகர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தானா தானா தானா தானா தானா தானா ...... தனதானா |
ஏறா னாலே நீறாய் மாயா வேளே வாசக் ...... கணையாலே ஏயா வேயா மாயா வேயா லாமே ழோசைத் ...... தொளையாலே மாறா யூறா யீறாய் மாலாய் வாடா மானைக் ...... கழியாதே வாராய் பாராய் சேரா யானால் வாடா நீபத் ...... தொடைதாராய் சீறா வீறா ஈரேழ் பார்சூழ் சீரார் தோகைக் ...... குமரேசா தேவா சாவா மூவா நாதா தீரா கோடைப் ...... பதியோனே வேறாய் மாறா யாறா மாசூர் வேர்போய் வீழப் ...... பொருதோனே வேதா போதா வேலா பாலா வீரா வீரப் ...... பெருமாளே. |
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.காளையும் பசுவும் சேர்ந்து வருதல், மன்மதன், மலர்க்கணை, புல்லாங்குழல் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 705 - கோடைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, பெருமாளே, காளையும், பசுவும், கோடைப், வாடா, மாயா, வேயா, மாறா, குமரேசா