பாடல் 685 - திருவலிதாயம் - திருப்புகழ்

ராகம் -
ஷண்முகப்ரியா
தாளம் - அங்கதாளம் - 8
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தாளம் - அங்கதாளம் - 8
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதய்ய தானதன ...... தனதான |
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர் மருளுள்ளி நாயடிய ...... னலையாமல் இருநல்ல வாகுமுன ...... தடிபேண இனவல்ல மானமன ...... தருளாயோ கருநெல்லி மேனியரி ...... மருகோனே கனவள்ளி யார்கணவ ...... முருகேசா திருவல்லி தாயமதி ...... லுறைவோனே திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே. |
வாசனை வீசும் மல்லிகை மலர் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை காம மயக்கத்தால் நினைந்து நினைந்து அடிநாயேன் அலைவுறாமல், நன்மை நல்கும் உன் இரண்டு திருவடிகளை விரும்பிப் போற்ற தக்கதான பெருமையும் மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ? கருநெல்லிக்காய் போல பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே, பெருமை வாய்ந்த வள்ளி தேவியின் கணவனே, முருகேசா, திருவலிதாயம்* என்ற தலத்தில் வீற்றிருப்பவனே, விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.
* திருவலிதாயம் இப்போது 'பாடி' எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 685 - திருவலிதாயம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நினைந்து, பெருமாளே, முருகேசா, தகிட