பாடல் 668 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான |
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத் தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட் டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட் டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார் தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச் சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத் தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச் சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற் சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத் தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக் கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப் பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக் கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற் கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே. |
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 668 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், மார்க்கம், மீது, கயல், பழங்கள், இடுதல், தொழில், ஞானம், முன்பு, நான், விட்டு, வைத்து, பெருமாளே, சரியை, கிரியை, எல்லா, பொருளை, செய்து