பாடல் 665 - திருவல்லம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதன தானந் தனதன தானந் தனதன தானந் ...... தனதான |
நசையொடு தோலுந் தசைதுறு நீரும் நடுநடு வேயென் ...... புறுகீலும் நலமுறு வேயொன் றிடஇரு கால்நன் றுறநடை யாருங் ...... குடிலூடே விசையுறு காலம் புலனெறி யேவெங் கனலுயிர் வேழந் ...... திரியாதே விழுமடி யார்முன் பழுதற வேள்கந் தனுமென வோதும் ...... விறல்தாராய் இசையுற வேயன் றசைவற வூதும் எழிலரி வேழம் ...... எனையாளென் றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும் இடமிமை யாமுன் ...... வருமாயன் திசைமுக னாருந் திசைபுவி வானுந் திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர் தெரிவையர் தாம்வந் தருநட மாடுந் திருவல மேவும் ...... பெருமாளே. |
* திருவல்லம் வேலூருக்கு அருகில் உள்ளது. திருமாலாலும் பிரமானாலும் சிவன் வலம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்டதால் திருவலம் என்ற பெயர் வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 665 - திருவல்லம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ளவர்களும், வந்து, தானந், தனதன, வலம், பொருந்தி, நீரும், பெருமாளே, யானை