பாடல் 661 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - .......;
தாளம் -
தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய தய்ய ...... தனதான |
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யு மைய ...... இடையாலுந் துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல் சொல்லு கள்ள ...... விழியாலும் மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல ...... குழலாலும் மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல்வ ...... ரையிலேனல் தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை ...... முருகோனே மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல ...... பெருமாளே. |
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 661 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தய்ய, வள்ளி, பெருமாளே, தக்க, கொண்ட, மைலில், வெள்ளிகரம், தெய்வ, முல்லை, நல்ல, மையல், செய்யும், சொல்லை