பாடல் 646 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - குந்தல
வராலி; தாளம் - அங்கதாளம் - 7
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானதன தானத் ...... தனதான |
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் தீதகல வோதிப் ...... பணியாரும் தீநரக மீதிற் ...... றிகழ்வாரே நாதவொளி யேநற் ...... குணசீலா நாரியிரு வோரைப் ...... புணர்வேலா சோதிசிவ ஞானக் ...... குமரேசா தோமில் கதிர்காமப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 646 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே