பாடல் 638 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் -
காம்போதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன தனத்தத் தனதான தானன ...... தனதான |
உடுக்கத் துகில்வேணு நீள்பசி யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர் படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக வடக்குச் சிலதூதர் நாடுக குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ அடிக்குத் திரகார ராகிய அரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே. |
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 638 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வேண்டும், தனதான, திசையில், என்றும், தூதர்கள், சிலதூதர், தானன, தனத்தத், தேடட்டும், சொல்லி, அசோகவனத்தை, உள்ள, அனுப்ப, பெருமாளே, தேடுக, மயக்கக், குறிப்பிற், வரலாமோ, கதிர்காம, அந்த