பாடல் 636 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - குந்தல
வராலி; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான |
திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாமப் ...... பெருமாள்காண் செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண் மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் ...... பெருமாள்காண் மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் அரவுபிறை வாரி விரவுசடை வேணி அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் ...... பெருமாளே. |
* அருவி - கதிர்காமத்துக்கு அருகில் மாணிக்க நதியில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 636 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நீதான், பெருமாள்காண், பெருமான், தனதனன, விளங்கும், அழகிய, பெருமாளே, வீசி, வீரப், விளையாடும்