பாடல் 635 - வள்ளியூர் - திருப்புகழ்

ராகம் - அடாணா ;
தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தய்ய தானன ...... தனதான |
அல்லில் நேருமி ...... னதுதானும் அல்ல தாகிய ...... உடல்மாயை கல்லி னேரஅ ...... வழிதோறுங் கையு நானுமு ...... லையலாமோ சொல்லி நேர்படு ...... முதுசூரர் தொய்ய வூர்கெட ...... விடும்வேலா வல்லி மாரிரு ...... புறமாக வள்ளி யூருறை ...... பெருமாளே. |
இரவில் தோன்றும் மின்னல் நிலைக்கும் நேரம்கூட நிலைக்காத இந்த உடல் வெறும் மாயை. கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை வழியில் என் ஒழுக்க நெறியும் அடியேனும் நிலைகுலையலாமோ? தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு எதிர்த்த பெரும்சூரர் அழிய, அவர்கள் ஊர் பாழ்பட செலுத்திய வேலாயுதனே, கொடிபோன்ற தேவிமார் (வள்ளி, தேவயானை) இருபுறமும் ஆக வள்ளியூரில்* குடிகொண்ட பெருமாளே.
* வள்ளியூர் திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 28 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 635 - வள்ளியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, வள்ளி