பாடல் 624 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா |
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும் அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங் கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர் புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர் சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர் வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல் அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள் கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ...... நுதிரேகை வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ் உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல் உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளந் தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில் தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள் சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய் வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல் மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ...... பெருமாளே. |
* இறைவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 624 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்தத்த, தத்ததன, போர், வரிகள், வல்லனவும், செய்ய, உடைமை, வலிமை, பொருந்திய, உடையவனே, உண்டு, திங்குத்தி, ஆகிய, அருள், மொகு, தங்குத்த, ஆதல், வாய்ந்த, நெறு, கொண்டு, இவைகளை, இன்பம், அணிவனவும், கொடுப்பனவும், அழகிய, மார்பகங்களை, பெருமாளே, நிறைந்த, இவைகளின், மீன், தாளங்களின்