பாடல் 594 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான |
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர் மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர் வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச் சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர் சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர் தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர் பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 594 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டுவர், தந்தத், தாத்தன, தனத்தந், திருச்செங்கோடு, அணிந்த, என்றும், அன்பு, இருப்பதால், உள்ளவர்கள், காட்டுவ, பெருமாளே, போல், செய்து