பாடல் 584 - விநாயகமலை - பிள்ளையார்பட்டி - திருப்புகழ்

ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - அங்தாளம் - 6 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன தனதன தானா தனாதன ...... தனதான |
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம சததள பாதா நமோநம ...... அபிராம தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம சமதள வூரா நமோநம ...... ஜகதீச பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம பரிமள நீபா நமோநம ...... உமைகாளி பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய் இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென் றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும் வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர வனசர ராதார மாகிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 584 - விநாயகமலை - பிள்ளையார்பட்டி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, தானா, உடையவனே, தனதன, தனாதன, கொண்ட, தேவர்கள், இறைவனே, கொண்டவனே, ஆகார, பகவதி, பூமியும், தகதிமி, விநாயக, பெருமாளே