பாடல் 565 - இரத்னகிரி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற் கமலத் தியல்மைக் ...... கணினாலே கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே நயபொற் கலசத் தினைவெற் பினைமிக் குளநற் பெருசெப் ...... பிணையாலே நலமற் றறிவற் றுணர்வற் றனனற் கதியெப் படிபெற் ...... றிடுவேனோ புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக் கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும் பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட் டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே செயசித் திரமுத் தமிழுற் பவநற் செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே சிவதைப் பதிரத் தினவெற் பதனிற் றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே. |
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 565 - இரத்னகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், கொண்ட, விட்டு, அழகிய, செய்து, குமரப், பெருமாளே