பாடல் 535 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த தய்யத்த தாத்த ...... தனதான |
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால் வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய் யில்லத்து றாக்க ...... வலைமேவு பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின் பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர் கல்விக்க லாத்த ...... லையலாமோ அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல்குக்கு டார்த்த ...... இளையோனே அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல் கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர் வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. |
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியார் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 535 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, நான், போய், வள்ளி, தாத்த, தய்யத்த, கடந்த, பெருமாளே, காத்த, இளையோனே, வீக்கு, மேற்றர், வல்லிக்கு, வள்ளிக்கு, வாய்த்த