பாடல் 514 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்த தானன தத்தன தானன தத்த தானன தத்தன தானன தத்த தானன தத்தன தானன ...... தனதான |
முத்த மோகன தத்தையி னார்குர லொத்த வாயித சர்க்கரை யார்நகை முத்து வாரணி பொற்குவ டார்முலை ...... விலைமாதர் மொக்கை போகசெ குத்திடு வார்பொருள் பற்றி வேறும ழைத்திடு வார்சிலர் முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச் சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே சித்தெ லாமொரு மித்துன தாறினம் வைத்து நாயென ருட்பெற வேபொருள் செப்பி யாறுமு கப்பரி வோடுணர் ...... வருள்வாயே தத்த னானத னத்தன தானெனு டுக்கை பேரிமு ழக்கிட வேகடல் சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா சத்தி லோகப ரப்பர மேசுர நிர்த்த மாடுக ழற்கரு ணாகர தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா துத்தி மார்முலை முத்தணி மோகன பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள் துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா சுட்டி நீலஇ ரத்தின மாமயி லுற்று மேவிய ருட்புலி யூர்வளர் சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே. |
முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள். (கிளி போன்ற) குரலைக் கொண்ட வாயினின்றும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். முத்தைப் போன்ற பற்கள் உடையவர். கச்சு அணிந்த அழகிய மலை போன்ற மார்பகங்களை உடைய பொது மகளிர். மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள். பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள். சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள். துன்பமும் தரித்திரமும் சூழத் தொடர மாய வித்தைகள் ஆடி அழைப்பவர்கள். வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு அஷ்டமா சித்திகளும்** நல்ல அறிவும் தோன்ற, (நந்தி) ஒளி காணப்படும் (லலாட)* புருவ நடுநிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும்*** கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக. தத்த னானத னத்தனதா இவ்வாறான ஒலிகளை உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய, கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலைச் செலுத்தியவனே, அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழு முதற் கடவுளாய், பரம ஈசுவரனாய், நடனம் ஆடுகின்ற திருவடிகளை உடைய கருணாகரனாய், தாமே பரம் பொருளாய், அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமா தேவியின் குழந்தையே, தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள, அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மான் பெற்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள மார்பனே, நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து சிதம்பரத்தில் வீறுடன் விளங்கும் சுத்த மூர்த்தியே, இந்திராணி பெற்ற தேவயானையாகிய நாயகியின் பெருமாளே.
* சுடர் ம(மா)டம் - நந்தி ஒளி காணும் லலாடஸ்தானம் ஆகும். புருவ மத்தியைக் குறிக்கும். இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும். இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
** அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
*** ஆறு முகத்தின் தத்துவம் பின்வருமாறு:சக்திகள் ஆறு - ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி.பீஜங்கள் ஆறு - அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை.அத்துவாக்கள் ஆறு - மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்.இறைக் குணங்கள் ஆறு: ஸர்வக்ஞத சக்தி - பூரண அறிவுடன் இருக்கும். நித்ய திருப்தி சக்தி - எல்லா அனுக்ரகமும் புரியும். அநாதிபோத சக்தி - எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும். ஸர்வ சுதந்திர சக்தி - ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும். அலுப்த சக்தி - ஐந்தொழிலைப் புரியும். அநந்த சக்தி - எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.குணங்கள் ஆறு - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.ஆறு முகங்களைப் பற்றி அருணகிரிநாதர் அருளிச் செய்த பாடல்: ஏறுமயில் ஏறி
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 514 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சக்தி, இதழ், தானன, கரம், தத்த, பிங்கலை, எல்லா, இடைகலை, மூன்று, தத்தன, உள்ள, ஒன்று, நீர், ஆதல், பத்து, நாடிகளுள், ஸஹஸ்ராரம், காற்றுக்கு, என்றும், பெயர், உடலில், விடும், சக்கரம், யும், இருத்தல், உருவினன், தத்துவம், குணங்கள், தரும், புரியும், பின்வருமாறு, திரு, முனை, சுழு, பெயர்களும், இருக்கும், உரிய, சுவாசம், கொண்டுள்ள, வாயிதழ், னானத, ரத்தின, சுத்த, கிளி, பெருமாளே, வைத்து, சித்தி, சர்க்கரை, மோகன, முத்து, பற்றி, ழைத்திடு, கொண்ட, அழகிய, அணிந்துள்ள, மீது, ஒளியும், பெற்ற, இங்கு, இடது, எல்லாம், அழைப்பவர்கள், உடைய, ஆகிய, நந்தி, புருவ, சுழுமுனை