பாடல் 490 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -
சங்கராபரணம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2
தகதிமி-2, தகதிமி-2
தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான |
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும் விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே விரும்பத் தக்கன போகமு மோகமும் விளம்பத் தக்கன ஞானமு மானமும் வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில் இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல் கிடந்திட் டுத்தம ரானவர் கோவென இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே இறந்திட் டுப்பெற வேகதி யாயினும் இருந்திட் டுப்பெற வேமதி யாயினும் இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன் நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன் குலங்கட் பட்டநி சாசரர் கோவென இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல் ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும் ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 490 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, உடைய, கொண்ட, தத்தன, தனந்தத், தகதிமி, ஒப்பற்ற, பெருமாளே, பெறவாவது, டுப்பெற, தக்கன, கோவென, யாயினும், துக்கொரு