பாடல் 454 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான |
கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம் கந்த ரந்தரித் தாடு கொங்கைக ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல அங்க மைந்திடைப் பாளி தங்கொடு குந்தி யின்குறைக் கால்ம றைந்திட அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும் அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல் அங்கை பொன்பறிக் கார பெண்களொ டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ சங்கு பொன்தவிற் காள முந்துரி யங்கள் துந்துமிக் காட திர்ந்திட சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம் சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச் செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ அந்த கன்புரத் தேற வஞ்சகர் செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே திங்க ளொண்முகக் காமர் கொண்டவன் கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 454 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடையவர்கள், தந்த, தந்தன, தந்தனத், அழகிய, சிறந்த, ஒலிக்க, செந்தமிழ்ப், கந்த, தம்பிரானே