பாடல் 443 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஆஹிரி
...; தாளம் - அங்கதாளம் - 14 1/2
தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானனா தனன தானனம் ...... தனதான |
விதிய தாகவெ பருவ மாதரார் விரகி லேமனந் ...... தடுமாறி விவர மானதொ ரறிவு மாறியே வினையி லேஅலைந் ...... திடுமூடன் முதிய மாதமி ழிசைய தாகவே மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு முறைமை யாகநி னடிகள் மேவவே முனிவு தீரவந் ...... தருள்வாயே சதிய தாகிய அசுரர் மாமுடீ தரணி மீதுகுஞ் ...... சமராடிச் சகல லோகமும் வலம தாகியே தழைய வேவருங் ...... குமரேசா அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரந் ...... தனில்மேவி அருணை மீதிலெ மயிலி லேறியே அழக தாய்வரும் ...... பெருமாளே. |
விதி ஆட்டுவிப்பதால் இளமை வாய்ந்த பெண்களின் தந்திரச் செயல்களில் மனம் தடுமாற்றம் அடைந்து, தெளிவுள்ளதான ஓர் அறிவும் கெட்டுப்போய் வினை வசப்பட்டு அலைச்சலுறும் முட்டாள் ஆகிய நான், பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி, முறைமைப்படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள் புரிவாயாக. வஞ்சனை கூடிய அசுரர்களுடைய பெரிய முடிகள் பூமியில் சிந்தும்படி போர் செய்து, எல்லா உலகங்களும் (மயிலின் மீது) வலமாக, (அவ்வுலகங்கள்) நலமுறும்படியாக வரும் குமரேசனே, நிரம்ப தேவர்கள் வெண்சாமரம் வீச, அருமை வாய்ந்த கோபுரத்தில் வீற்றிருந்து, திருவண்ணாமலையில் மயில் மீது ஏறி அழகுடன் வரும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 443 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிடதகதிமி, வாய்ந்த, வரும், மீது, உனது, தகிட, பெருமாளே