பாடல் 44 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .....
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த ...... தனதான |
கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக் கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப் பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப் புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே. |
மேகம் போன்ற கூந்தலும் குலைந்து அலைந்து, விளங்கும் கண்கள் சிவந்து சோர்வுற்று, மகிழ்ச்சி மிகுந்து கைகளும் கூப்பி நெஞ்சத்தினுள்ளே உணர்ச்சி பெருகித் திரிகின்ற பெண்கள் மீது மயல் உண்டாகி, (அவர்களுடன் கூட) விலை பேசி, பொன் குடங்களும் அஞ்சும் என்று கூறத் தக்க மார்பகங்களையும் தோள்களையும் தழுவி, அன்பும், நட்பும், குணமும் ஒன்றாகக் கூடி, உடனே ஊடியும், பின்பு கலந்தும், மனம் குழைந்தும், கேடு விளைவித்தும் எப்போதும் இவ்வாறே திரிந்து அழிவேனோ? மன்மதன் வாடி, நைந்து, வெந்து அழிந்து சிதறும்படி அன்று (நெற்றிக்) கண்ணைத் திறந்து விழித்தவரும், கரிய கழுத்தை உடையவருமான சிவபெருமான் பெற்றெடுத்த கூரிய வேலனே, கூட்டம் கூட்டமாய் நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சகர்களாகிய அசுரர்கள் பயப்படும்படி கொடிய போர் செய்தவனும், அன்பர்களுக்கு இன்பம் தருபவனும் ஆன நண்பனே, வீரனே, கோபம் கொண்டு, இலங்கை அரசனான ராவணனுடைய தலைகள் சிதற கொடிய அம்பை ஏவிய ராமன் (திருமால்) அன்பு கொள்ளும் இன்ப மருகனே, சிவந்த, அழகிய சதங்கையும் சிலம்பும் தண்டையும் அணிந்து, திருச்செந்தூரில் எழுந்தருளும் கந்தனே, எங்கள் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 44 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, வந்த, ரிந்த, இன்ப, சிவந்த, பெருமாளே, கொடிய, எங்கள், அன்று, ளுங்கு, ரிந்து, நைந்து, வெந்து, வெஞ்ச