பாடல் 409 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - மத்யமாவதி
; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான |
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக் கஜமுகத் தவுணனைக் ...... கடியானை கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக் கனிவயிற் றினிலடக் ...... கியவேழம் அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத் தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற் றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக் கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன் நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற் கரியுரித் தணிபவற் ...... கொருசேயே துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத் துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச் சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற் சுடரயிற் சரவணப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 409 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனத், யானை, பெரிய, அடக்கிய, கொண்ட, சரவணப், பெருமாளே