பாடல் 406 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஆரபி ;
தாளம் - அங்கதாளம் - 10
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதனன தனந்த தானன ...... தந்ததான தனதனன தனந்த தானன ...... தந்ததான |
கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே. |
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், பெண்களின் வதந்திப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 406 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கலங்கி, பிளந்து, தம்பிரானே, தந்ததான, தானன, தனதனன, தனந்த, தகிடதகதிமி