பாடல் 404 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
இறுகு மணிமுலை மருவு தரளமு மெரியு முமிழ்மதி ...... நிலவாலே இரவி யெனதுயிர் கவர வருகுழ லிசையி லுறுகட ...... லலையாலே தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு சரமி லெளியெனு ...... மழியாதே தருண மணிபொழி லருணை நகருறை சயில மிசையினில் ...... வரவேணும் முறுகு திரிபுர மறுகு கனலெழ முறுவ லுடையவர் ...... குருநாதா முடிய கொடுமுடி யசுரர் பொடிபட முடுகு மரகத ...... மயில்வீரா குறவர் மடமக ளமுத கனதன குவடு படுமொரு ...... திருமார்பா கொடிய சுடரிலை தனையு மெழுகடல் குறுக விடவல ...... பெருமாளே. |
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.நிலவு, குழல் இசை, கடல் ஒலி, மன்மதன், அவனது பாணம் ஆகியவை விரக நோயை வளர்ப்பவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 404 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, அழகிய, வாய்ந்த, செலுத்திய, மன்மதன், கொடிய, பெருமாளே