பாடல் 4 - விநாயகர் - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் -
அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தனன தனதன தத்தன தத்தன தனன தனதன தத்தன தத்தன தனன தனதன தத்தன தத்தன ...... தனதான |
நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே தெனன தெனதென தெத்தென னப்பல சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல் திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை செரும உதரநி ரப்புசெ ருக்குடல் நிரைய அரவநி றைத்தக ளத்திடை திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்றுந டித்திட எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே. |
* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.
** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 4 - விநாயகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, விநாயகர், வந்து, தனதன, என்னும், துகு, ஒலிக்கும், நிறைந்த, நீர், டிமு, கடலைக், அகத்தியர், குட்ட, தவம், முநிவர், அந்த, குட்டிக், தோப்புக்கரணம், சிறிய, திமித, தெத்தென, தெனதென, அர்ச்சனை, தெனன, திமிதிமி, டிமுட, தகதிமி, கொண்டு, உள்ள, நான், பெருமாளே, திருவடி