பாடல் 384 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -
செஞ்சுருட்டி ; தாளம் - அங்தாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
அமுத மூறுசோ லாகிய தோகையர் பொருளு ளாரையெ னாணையு னாணையெ னருகு வீடிது தானதில் வாருமெ ...... னுரைகூறும் அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள் தெருவின் மீதுகு லாவியு லாவிகள் அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி ...... னருள்தாராய் குமரி காளிவ ராகிம கேசுரி கவுரி மோடிசு ராரிநி ராபரி கொடிய சூலிசு டாரணி யாமளி ...... மகமாயி குறளு ரூபமு ராரிச கோதரி யுலக தாரிஉதாரிப ராபரி குருப ராரிவி காரிந மோகரி ...... அபிராமி சமர நீலிபு ராரித னாயகி மலைகு மாரிக பாலிந னாரணி சலில மாரிசி வாயம னோகரி ...... பரையோகி சவுரி வீரிமு நீர்விட போஜனி திகிரி மேவுகை யாளிசெ யாளொரு சகல வேதமு மாயின தாயுமை ...... யருள்பாலா திமித மாடுசு ராரிநி சாசரர் முடிக டோறுக டாவியி டேயொரு சிலப சாசுகு ணாலிநி ணாமுண ...... விடும்வேலா திருவு லாவுசொ ணேசர ணாமலை முகிலு லாவுவி மானந வோநிலை சிகர மீதுகு லாவியு லாவிய ...... பெருமாளே. |
அமுதம் ஊறி வருவது போல் இனிக்கும் சொற்களைக் கொண்ட மயில் போன்ற பெண்கள் பொருள் உள்ள செல்வர்களை "என் மேல் ஆணை உன் மேல் ஆணை என் வீடு சமீபத்தில் தான் இருக்கிறது, அங்கே வாரும்" என்று பேசுகின்ற மூட விலைமாதர், குதர்க்கம் பேசும் கேடுறுவோர், தெருவில் சரசமாக குலவி உலவுபவர்கள், அத்தகையோரது மாயை என் மீது தாக்காமலும், நான் கெடாமலும் இருக்க உனது திருவருளைத் தந்து அருளுக. குமரி, காளி, வராகி, மகேஸ்வரி, கெளரி, மோடி, முதலிய பெயர்களை உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி, உக்ரமான சூலத்தை ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி, வாமன உருவம் கொண்ட திருமாலின் சகோதரி, உலகத்தைத் தரித்துப் புரப்பவள், தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள், குருவாகிய சிவனுக்குக் கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள், போர் வல்ல துர்க்கை, திரிபுரம் எரித்த சிவபெருமானின் பத்தினி, இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி, நீர் பொழியும் மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள், பரா சக்தி, யோகி, வலிமை உள்ளவள், வீரம் உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள், சக்கரம் ஏந்திய திருக்கரத்தை உடையவள், இலக்குமி, ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே, பேரொலி செய்து போராடிய தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களுடைய தலைகளில் எல்லாம் ஆயுதங்கள் படும்படி செலுத்தி வைத்து, அங்கு கூடிய சில பேய்கள் குணலை என்ற ஆரவாரத்துடன் கூத்தாடி மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தியவனே, லக்ஷ்மீகரம் நிறைந்த சோணாசலேஸ்வரது திருவண்ணாமலையில் மேகம் உலவும் கோபுரத்தின் ஒன்பது நிலைகளைக் கடந்து கோபுர உச்சியில் விளக்கமுற்று உலாவிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 384 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, உடையவள், போன்றவள், தகதிமி, ஏந்தியவள், குணம், மேகம், நிறைந்த, உள்ளவள், பூண்டவள், கொண்ட, குமரி, லாவியு, மீதுகு, ராரிநி, ராபரி, பெருமாளே, மகமாயி, மேல்