பாடல் 355 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் -
பூபாளம் ; தாளம் - சதுஸ்ர ஏகம் - திஸ்ரநடை - 6
எடுப்பு - அதீதம்
எடுப்பு - அதீதம்
தனத்த தான தானான தனத்த தான தானான தனத்த தான தானான ...... தனதான |
அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித் தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய் தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத ...... மருகோனே சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி மகப்ர வாக பானீய ...... மலைமோதும் மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே. |
அழியக் கூடிய இந்த உடல் என்றும் நிலைத்து இருக்கச் செய்ய, மூக்கை அடைத்து மூச்சு ஓடாத வகையை அப்யசித்து, வீணாக நிரம்ப மூலிகைகளை உண்டு, வாடுகின்ற, அலுப்பும் மூடத்தனமும் உள்ள யோகியாக ஆகாமல், மும்மலங்களினாலும் மாயையினாலும் தோன்றுகின்ற காரியங்களையும் வேதனைகளையும் ஒழித்து, அறிவும், ஆசாரமும், முயற்சியும் உடையவனாக ஆகி, யான் வேறு, எனது உடல் வேறு, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவுமே வேறு என்ற பற்றற்ற நிலையினால் அடையக் கூடியதும், நிகழ்ச்சிகளைக் காட்டும் இந்த மனதுக்கு எட்டாததாய் விளங்குவதும் ஆன சிவ ஸ்வரூப மஹா யோகி என யான் ஆகுமாறு என்னை ஆண்டருள்வாயாக. ஒலி தரும் இசையுடன் கூடிய புல்லாங்குழலை ஊதுபவனும், ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின் அன்பு மாறுபடாத மருமகனே, தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே, சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே, அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே, மனிதர்கள் முதல் சகல ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட வரும் காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும், நறுமணம் கமழும் சோலைகள் சூழும் திருவானைக்காவை மேவியவனே, சகல லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே, எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 355 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, உள்ள, வேறு, தானான, யான், கூடிய, யோகி, பெருமாளே, உடல்