பாடல் 308 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் -
நாட்டகுறிஞ்சி; தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தானதனத் தனதனன ...... தனதான தானதனத் தனதனன ...... தனதான |
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே யானுமுனக் கடிமையென ...... வகையாக ஞானஅருட் டனையருளி ...... வினைதீர நாணமகற் றியகருணை ...... புரிவாயே தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே. |
* முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு. எனவே ஸரஸ்வதி சகோதரி உறவு.
** ஆறு படை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (பல மலைகள்), பழமுதிர்ச்சோலை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 308 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, ஸரஸ்வதி, உறவு, பெருமாளே, தனதான, தானதனத், தனதனன, தகதிமிதக