பாடல் 307 - ஆறு திருப்பதி - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தனதன தனதானன தனதன தனதானன தனதன தனதானன ...... தனதான |
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள் அபகட மகபாவிகள் ...... விரகாலே அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள் அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக் கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருட ...... னினிதாகக் கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென தரணியி லடியார்கண ...... நினைவாகா சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய ...... பெருமாளே. |
* ஆறு திருப்பதி: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன.இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள். ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 307 - ஆறு திருப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனதானன, மேல், வீடு, அநியாயமான, பெருமாளே, அசுரர்கள், தமது