பாடல் 303 - குன்றுதோறாடல் - திருப்புகழ்

ராகம் - பூர்வி
கல்யாணி ; தாளம் - அங்கதாளம் - 8
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனனந் தனன தந்த ...... தனதான தனனந் தனன தந்த ...... தனதான |
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன் அபயம் புகுவ தென்று ...... நிலைகாண இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும் இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப் பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே. |
ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 303 - குன்றுதோறாடல் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, யான், புரிந்து, ருந்து, தனதான, தனனந், தந்த, தகிட