பாடல் 297 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ..........;
தாளம் - ........
தந்தந் தனதன தந்தந் தனதன தந்தந் தனதன ...... தனதான |
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்துந் தியதிரு ...... மதனாலே வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற வஞ்சம் பதும்விடு ...... மதனாலே பங்கம் படுமென தங்கந் தனிலுதி பண்பொன் றியவொரு ...... கொடியான பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல் பொன்றுந் தனிமையை ...... நினையாயோ தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள் சென்றொன் றியபொழி ...... லதனூடே தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப் பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள் என்றும் புகழ்பெற ...... மலா£னும் பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி யென்றுஞ் செயவல ...... பெருமாளே. |
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளுடைய தாய் பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 297 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தந், எங்கும், தனதன, வந்து, உடைய, நிறைந்த, பெருமாளே, தெனதென, மதனாலே, வஞ்சம், தெந்தெந், குவளைகள்