பாடல் 296 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ..........;
தாளம் - ..........
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான |
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோட அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதி அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோ செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள் சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர் தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே. |
கம கம என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த (பொது) மகளிருடைய நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ, ஒன்று சேர பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம் கொள்ள, (கையில் அணிந்துள்ள) வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள் போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச, மிகவும் தவிப்புடன் சில மொழிகள் அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற, அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும் குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள் மிகவும் சிவக்க, (இவ்வாறு கலவி இன்பத்தில்) பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம், குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து (அதனால்) உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக, நரை அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச் சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான் புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது திருவுள்ளம் நினையாதோ? செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதித்தி ததிதீதோ தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி --- இவ்வாறான ஒலி பெருகி நீள தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து நடனம் செய்யவல்ல பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 296 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தத்தத்த, கொண்ட, திமிர்ததிமி, தத்ததன, குகுகுகுகு, குக்குகுத, தரரரர, குக்குக்கு, திகுடதிமி, ரிரிரிரிரி, தித்திகுட, றிற்றித்த, உள்ளம், வாய்ந்த, மிகவும், பெருமாளே, றிற்றிரிரி, தகுடதிகு, ததிதீதோ, செயகிருத, தொக்குத்தொ, கிருதசெய, குச்செகுத, கெணசெகுத, செக்குச்செ, குத்தொகுத, டிடிதீதோ, நினையாதோ, தித்தித்தி, தித்ரிகட, தித்திக்ர, திரிகடக, கடகதிரி, செகுதகெண