பாடல் 284 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனத்தன தானம் தனத்தன தானம் தனத்தன தானம் ...... தனதான |
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் ப்ரியக்கட லூடுந் ...... தணியாத கருக்கட லூடுங் கதற்றும நேகங் கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும் கழற்புணை நீதந் ...... தருள்வாயே தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ் சதுர்த்தச லோகங் ...... களும்வாழச் சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ் சளப்பட மாவுந் ...... தனிவீழத் திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ் செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந் திருத்தணி மேவும் ...... பெருமாளே. |
விரிவான தந்திரமான எண்ணங்கள் உடைய விலைமாதர்களின் மேன்மை விளங்கும் மார்பகங்களில் சிறப்புடன் தினந்தோறும் மயங்கித் திளைத்து, அஞ்ஞானம் மிக்க ஆசைக் கடல் உள்ளும், ஓய்வு இல்லாத பிறவிக் கடல் உள்ளும், கத்திப் படிக்கும் நூற்கடல் உள்ளும் நான் சுழற்சி அடைந்து வேதனை அடையாமல், (இக் கடல்களைக் கடக்க) கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள் புரிவாயாக. செருக்கு மிக்க, வேதம் வல்ல பிரமன் சிறையில் அடைபடவும், நாள்தோறும் பதினான்கு உலகங்களும் வாழும்படியும், ஏழு கடல்களும் சிறந்த ஏழு மலைகளும் துன்பப்படவும், மாமரமாகிய சூரனும் தனித்து விழவும், அழகிய கைகளில் ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து போர் செய்தவனே, களிப்புற்ற மயில் ஏறும் செல்வமே, சிறப்புற்ற ஞானமும், முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 284 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, உள்ளும், தானம், கடல், மிக்க, பெருமாளே, வீசும், செருக்கு, விளங்கும்