பாடல் 280 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான |
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப் பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும் பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப் பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும் பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக் குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக் கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக் கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச் சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச் சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 280 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனத், உடலை, கதித்தநற், நல்ல, உயர்ந்த, அழகிய, மிகுந்த, கூடிய, உடைய, இந்தப், பெருமாளே, அடியார்களை