பாடல் 253 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதன ...... தனதான |
கச்சணி யிளமுலை முத்தணி பலவகை கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக் கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர் கட்செவி நிகரல்குல் ...... மடமாதர் இச்சையி னுருகிய கச்சைய னறிவிலி யெச்சமி லொருபொரு ...... ளறியேனுக் கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணை யிப்பொழு தணுகவு ...... னருள்தாராய் கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனை நச்சியெ திருடிய ...... குறையால்வீழ் குற்கிர வினியொடு நற்றிற வகையறி கொற்றவு வணமிசை ...... வருகேசன் அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில் அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே அப்பணி சடையரன் மெச்சிய தணிமலை யப்பனெ யழகிய ...... பெருமாளே. |
* நளகூபரன், மணிக்¡£வன் என்னும் குபேரனின் புத்திரர் இருவரும் மதுவருந்தி, ஆடையின்றி ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் தோன்றினர். நாரதர் சபிக்க அவர்கள் மருத மரமாயினர். கண்ணன் கட்டப்பட்ட உரல் அவர்கள் மீது விழுந்ததும் சாபம் தீர்ந்து மகிழ்ந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 253 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, தனதன, தத்தன, நாரதர், உடைய, திருமால், பெருமாளே, திருடிய, மெச்சிய