பாடல் 217 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - மாயா மாளவ
கெளளை; தாளம் - சதுஸ்ர த்ருவம்
கண்ட நடை - 35, எடுப்பு /4/4/4 0
நடை தகிடதக
கண்ட நடை - 35, எடுப்பு /4/4/4 0
நடை தகிடதக
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான |
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச் சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர் கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 217 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, எத்தனை, நோய், கொண்ட, உனது, அழகிய, வீற்றிருக்கும், சேர்க்கை, தத்தனத, னத்தனத, தம்பிரானே, புண்