பாடல் 195 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த தனதனன தான தந்த ...... தனதான |
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக் கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக் கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய் புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த புதியமயி லேறு கந்த ...... வடிவேலா பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே. |
* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து 'மாதங்கி' எனப் பெயர் பெற்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 195 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனதனன, பிறந்து, மீது, அவளது, பெற்று, பழநிமலை, கந்த, வென்று, பெருமாளே