பாடல் 194 - பழநி - திருப்புகழ்

ராகம் - ராமப்ரியா; தாளம் -
அங்கதாளம் - 6 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2
தனனா தனனா ...... தனதான தனனா தனனா ...... தனதான |
வரதா மணிநீ ...... யெனவோரில் வருகா தெதுதா ...... னதில்வாரா திரதா திகளால் ...... நவலோக மிடவே கரியா ...... மிதிலேது சரதா மறையோ ...... தயன்மாலும் சகலா கமநூ ...... லறியாத பரதே வதையாள் ...... தருசேயே பழனா புரிவாழ் ...... பெருமாளே. |
வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும், கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது? பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் ஒன்பது லோகங்களை* இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது? சத்திய சொரூபனே, வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய், பழனிப்பதியில் வாழ்கின்ற பெருமாளே.
* பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம், துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 194 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, ஒன்பது, பெருமாளே, தனதான, தகதிமி