பாடல் 183 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான |
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள் சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக ...... மதியாலே மருவுநி தம்பத் தடத்தி லேநிறை பரிமள கொங்கைக் குடத்தி லேமிக வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ...... வலையாலே நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில் வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர வசமுட னன்புற் றிணக்கி லேயொரு நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ...... மதிகேடாய் அலையநி னைந்துற் பநத்தி லேயநு தினமிகு மென்சொப் பனத்தி லேவர அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ ...... அருள்தாராய் பலபல பைம்பொற் பதக்க மாரமு மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே பதியினில் மங்கைக் கதித்த மாமலை யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர் பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே. |
* இவ்வூர் ஈரோட்டுக்கு அருகில் உள்ளது.
** கதித்த மலை என்னும் பெயருடைய முருகன் கோயில் ஊத்துக்குழிக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 183 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வீசும், என்னும், கதித்த, நான், தானன, தந்தத், தனத்த, தனதன, அருகில், உள்ளது, அழிந்து, பெருமாளே, பரிமள, பனத்தி, கடப்ப, அழகிய, தினமும்