பாடல் 1328 - மங்களம் - திருப்புகழ்

ராகம் - ... ; தாளம் - ... ;
ஏறுமயி
லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. |
தொன்மைவாய்ந்த திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1328 - மங்களம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மொன்றே, முகம்தான், செய்தது, பெருமாளே, வேண்டும்