பாடல் 1327 - மதுரை - திருப்புகழ்
ராகம் - ... ; தாளம் - ... ;
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா |
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே. |
சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே, பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக. உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே, இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.
இது ஒரு துதிப்பாடல். வேண்டுகோள் எதுவும் இல்லாதது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1327 - மதுரை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வீசும், பெருமாளே, தனதானா