பாடல் 1305 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான |
குருபர சரவண பவசண் முககுக ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறு நெறென உலவுவி லங்கற்குறிஞ்சியுறைதொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே ... அடிபடு முரசு தவில்பட கந்தக்கை துந்துமித டந்தப்பு டன் சலிகை ... கரடிகை யறைபறை திமிலை .. அபிநவ சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள் பிரளய மிதுவென அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபய மபயமெ னுஞ்சத்த மெங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர் ... வனச மலர்நிகர், செம்பொற் சதங்கையடி யன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே. |
குருபரனே, சரவணபவனே, ஷண்முகனே, குகப் பெருமானே, ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான திருப்புயங்களை உடையவனே, புலிகள், கரடிகள், காட்டெருமைகள், காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக. அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம் எழுப்பும் ஓசை, மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக, கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர, தாமரைமலர் போன்றதும் சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே. அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில் தரப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1305 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனந்ததன, தந்தத், பெருமாளே, அடைக்கலம், சிவசிவ, பெரிய, முரசு, கரடிகள், அருள், திமிலை, பிரளய