பாடல் 1303 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
குறிஞ்சி
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானனா தானன ...... தந்ததான |
வாரிமீ தேயெழு ...... திங்களாலே மாரவே ளேவிய ...... அம்பினாலே பாரெலா மேசிய ...... பண்பினாலே பாவியே னாவிம ...... யங்கலாமோ சூரனீள் மார்புதொ ...... ளைந்தவேலா சோதியே தோகைய ...... மர்ந்தகோவே மூரிமால் யானைம ...... ணந்தமார்பா மூவர்தே வாதிகள் ...... தம்பிரானே. |
கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே, மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே, உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே, (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ? சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே, ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே, பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா, மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே.
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1303 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீது, பிரிந்த, தகதகிட