பாடல் 1296 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
சாரங்கா / குறிஞ்சி
தாளம் - அங்கதாளம் - 8 கண்டநடை /5 யு 0
லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2
தாளம் - அங்கதாளம் - 8 கண்டநடை /5 யு 0
லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2
தானந்த தானத்தம் ...... தனதான |
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா நாலந்த வேதத்தின் ...... பொருளோனே நானென்று மார்தட்டும் ...... பெருமாளே. |
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1296 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விளங்கியவனே, மிக்க, கொண்ட, பெருமாளே, தகதகிட