பாடல் 1283 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
நடபைரவி
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனத்தத் தானத் ...... தனதான |
கருப்பற் றூறிப் ...... பிறவாதே கனக்கப் பாடுற் ...... றுழலாதே திருப்பொற் பாதத் ...... தநுபூதி சிறக்கப் பாலித் ...... தருள்வாயே பரப்பற் றாருக் ...... குரியோனே பரத்தப் பாலுக் ...... கணியோனே திருக்கைச் சேவற் ...... கொடியோனே செகத்திற் சோதிப் ...... பெருமாளே. |
மீண்டும் கருவிலே பிறக்கவேண்டும் என்ற ஆசையில் ஊறி மறுபடி பிறக்காமலும், மிகவும் கஷ்டங்களை அடைந்து யான் அலைந்து திரியாமலும், உன் அழகிய திருவடிகளாம் முக்தி அனுபவத்தை யான் சிறக்கும்படியாக என்னை ஆசீர்வதித்து அருள்வாயாக. ஆசைப் பெருக்கு இல்லாதவர்களுக்கு உரிமையானவனே, மேலானதாய் யாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு அருகில் உள்ளவனே, திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே, இவ்வுலகில் ஜோதி ரூபமாக விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1283 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யான், பெருமாளே