பாடல் 1270 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனத்தம் ...... தனதான |
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட் டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற் றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும் குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத் தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும் குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற் குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய் தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத் தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத் தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத் திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட் டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க் கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1270 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தாத், அழகிய, கண்டு, உனது, கலந்து, பெருமாளே, நீர், விளங்கும்