பாடல் 1261 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானன தான தாத்த தானன தான தாத்த தானன தான தாத்த ...... தனதான |
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த பாணமும் வாளு மேற்ற ...... இருபார்வை பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந் தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச் சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச் சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர தாபம கீப போற்றி ...... யெனநேமி மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட வாசவ னோதி மீட்க ...... மறைநீப மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1261 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தாத்த, உடைய, இல்லாததாய், பெருமாளே, வாழ்த்த, வார்த்தை, வேட்டை, காத்த