பாடல் 1230 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய ...... தனதான |
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின் கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக் கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள முகையாக்கை நையு ...... முயிர்வாழக் கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய் சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1230 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதாத்த, உடைய, தய்ய, வல்ல, வாழும், மலர், மார்பகங்களை, பெருமாளே, மலைமாக்கள், செய்ய, கொடி, வேடர்களின்