பாடல் 1225 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தத் தாத்த தத்தத் தாத்த தத்தத் தாத்த ...... தனதான |
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட கத்திற் கோட்டு ...... கிரியாலங் கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க யற்கட் கூற்றில் ...... மயலாகி அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும் அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த பத்மக் கூட்டி ...... லுறைவோரி பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர் பத்தக் கூட்ட ...... ரியல்வானம் மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று வெட்கக் கோத்த ...... கடல்மீதே மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1225 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், தாத்த, ஆகிய, புகழ்ந்து, கண்கள், பெருமாளே, சிவந்த