பாடல் 1223 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத் ...... தனதானம் |
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத் திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட் டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற் றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட் டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத் துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க் கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச் சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத் தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1223 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தனந், வெளித், அந்த, தத்தத், உற்று, கொண்டவனாய், பெரிய, அழகிய, மனம், பட்டிட், தோன்றி, பெருமாளே, மேல்